

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார். கார்த்திகேயா, சுமித்ரா, சைத்திரா ரெட்டி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார்.இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 25-நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டுக்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இத்திரைப்படம் வருகின்ற 25-ஆம் தேதி ஜி 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. அதற்கான டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.