• Mon. Apr 28th, 2025

அன்னை தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு..,

இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு அகியவற்றை நினைபடுத்தும் புனித வாரத் திருவழிபாடுகளின் தொடக்கமாக குருத்தோலை ஞாயிறு தினம் அமைகிறது. இயேசு தம் சீடரோடு ஒலிவ மலை அருகிலிருந்த பெத்பகு என்னும் ஊரிலிருந்து எருசலேம் நகரில் வெற்றியின் அரசராகப் பவனி வந்த நிகழ்வை, நினைவு கூறுவது குருத்தோலை ஞாயிறாகும். இயேசுவுக்கு சொந்த ஊர் மக்கள் வழங்கிய வரவேற்பை நினைவுகூரும் இந்த குருத்தோலை நிகழ்வு, கிறிஸ்தவர்களின் முக்கிய நிகழ்ச்சியாக உள்ளது.

கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா நடைபெறும் ஞாயிற்றுக் கிழமைக்கு முந்தைய ஞாயிற்றுக் கிழமை உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது.

இன்று குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு தேனி மாவட்டம் கம்பம் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. பங்குத்தந்தையரால் புனித நீரில் மந்திரிக்கப்பட்ட குருத்தோலைகளைக் கையிலேந்தி பீடப்பணியாளர்கள், ஆண்கள், பெண்கள் கம்பம் மெயின்ரோட்டிலிருந்து ஆலயத்திற்கு ஊர்வலமாகச் சென்றனர்.

பின்னர் கம்பம் பங்குத்தந்தை பாரிவளன் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதில் அருட்சகோதரிகள், மறைகல்வி மாணாக்கர், இளைஞர் இளம்பெண், குழந்தையேசு அன்பியம், புனித அன்னை தெரசா அன்பியம், புனித ஆரோக்கிய அன்னை அன்பியம், புனித செபஸ்தியார் அன்பியம் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.