• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

கரடியிடம் இருந்து தனது எஜமானரை காப்பாற்றிய நாய்…

கோவையில் கரடியிடம் போராடி தனது எஜமானரின் உயிரை வளர்ப்புநாய் ஒன்று காப்பாற்றியுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள குஞ்சப்பனை என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜ். விவசாயியான இவர் தனது வீட்டில் நாட்டு நாயொன்றை வளர்த்து வந்துள்ளார். இதற்கு பப்பி என பெயரிட்டுள்ளார்.…

வரும் ஒன்றாம் தேதி முதல் ரெயில்களின் நேரம் மாற்றம்…

வரும் நவம்பர் 1ந்தேதி முதல் 24 சிறப்பு ரெயில்களின் சேவை நேரம் மாற்றம் செய்யப்படவுள்ளது. கோயம்புத்தூா்-மயிலாடுதுறை ஜன்சதாப்தி விரைவு சிறப்பு ரெயில் (02084) மயிலாடுதுறை சந்திப்பை மதியம் 1.55 மணிக்கு சென்றடையும்.கோயம்புத்தூா்-நாகா்கோவில் விரைவு சிறப்பு ரெயில் (02668) மதுரை சந்திப்பை அதிகாலை…

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள காலியிடங்களை நிரப்புவது குறித்து அரசிதழில்…

கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள காலியிடங்களை நிரப்புவது பற்றி அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் தா.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசிதழில், உயர்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்கள், அனைத்து அரசு, அரசு உதவி…

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட்?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு ராகுல் டிராவிட் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் செயல்படும் தேசிய கிரிக்கெட் அகடாமியின் தலைமை பொறுப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்ள ராகுல் டிராவிட், இந்தியாவுக்கான துடிப்புமிக்க இளம் வீரர்களை உருவாக்கியுள்ளார். இதனிடையே,…

*வாழப்பாடி இராமமூர்த்தி அவர்களின் நினைவுநாள்*

திருவாளர் வாழப்பாடி இராமமூர்த்தி அவர்களின் நினைவுநாள் இன்று. இவர் சேலம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக, தேசிய மாணவர் அமைப்பில் மாணவர்களை திரட்டி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பேரன்பை பெற்றவராக திகழ்ந்தவர். வாழப்பாடி யார் அவர்கள் 1977,1980 ,1984,1989,1991 ஆண்டுகளில் தர்மபுரி…

நகங்களை வெட்டும் முன்…

நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.

சாலை நடுவே தோண்டி வைத்த குழியில் விழுந்து பரிதாபமாக இறந்தார்…

சாலை – பாலம் அமைக்கும் பணியைச் செய்பவர்கள் அவ்விடத்தில் தடுப்பு சுவர் அல்லது தடுப்பு பேரிகார்டு எதுவும் வைக்காத காரணத்தினால் இரவு நேரம் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சாலை நடுவே தோண்டி வைத்த குழியில் விழுந்து பரிதாபமாக இறந்தார்.…

ஒகேனக்கலில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை…

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு 42 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கும், பரிசலுக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 42 ஆயிரம் கன அடி அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு…

ராமேஸ்வரத்தில் தொடர்மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இன்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மிதமான மழை பெய்துவருகிறது. ராமேஸ்வரம் 10.2 மி.மீ பாம்பன்:5.1 மி.மீ தங்கச்சிமடம்:3.2 மி.மீ. மழைபெய்துள்ளது. இந்தத்தொடர் மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நான்கு ஏக்கர் கரும்பு விவசாயம் செய்துள்ளதை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா போடுவார்பட்டி கண்மாயில் ஆக்கிரமிப்பு செய்து சுமார் நான்கு ஏக்கர் கரும்பு விவசாயம் செய்துள்ளதை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து போடுவார்பட்டி கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற விஏஓ மதுரை நீதிமன்றத்தில் பொது நல வழக்கு…