• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

*வாழப்பாடி இராமமூர்த்தி அவர்களின் நினைவுநாள்*

திருவாளர் வாழப்பாடி இராமமூர்த்தி அவர்களின் நினைவுநாள் இன்று. இவர் சேலம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக, தேசிய மாணவர் அமைப்பில் மாணவர்களை திரட்டி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பேரன்பை பெற்றவராக திகழ்ந்தவர்.

வாழப்பாடி யார் அவர்கள் 1977,1980 ,1984,1989,1991 ஆண்டுகளில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் , 1998 கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர், இருமுறை தொழிலாளர் நலத்துறை, மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் பதவிகளை வகித்தவர்.

அன்னை இந்திரா காந்தி, தலைவர் ராஜீவ்காந்தி அவர்களின் அன்பையும் நம்பிகையையும் பெற்றவர். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பணியாற்றி முத்திரை பதித்தவர். வாழப்பாடியார் பெட்ரோலிய துறையை ஏற்றுபோது தேசிய தோழர்களின் நல்வாழ்வில் ஒளி ஏற்றியவர்.

வாழவைத்த வாழைப்பாடியார் அவர்கள்
ஓங்கு புகழ் என்றும் ,என்றென்றும்
வாழியவே ! என ராஜாலிங்கராஜா வாழ்த்துரை வெளியிட்டுள்ளார்.