• Fri. Apr 19th, 2024

சாலை நடுவே தோண்டி வைத்த குழியில் விழுந்து பரிதாபமாக இறந்தார்…

சாலை – பாலம் அமைக்கும் பணியைச் செய்பவர்கள் அவ்விடத்தில் தடுப்பு சுவர் அல்லது தடுப்பு பேரிகார்டு எதுவும் வைக்காத காரணத்தினால் இரவு நேரம் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சாலை நடுவே தோண்டி வைத்த குழியில் விழுந்து பரிதாபமாக இறந்தார்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதி வாழவந்தி பாலப்பட்டி கிராமங்கள் செல்லும் சாலையில் எம்.ராசாம்பாளையம் என்ற கிராமத்தில் சிட்கோ தொழில் பேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அங்கு அதற்காக சாலை அமைத்து பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த சாலைப் பாலம் அமைக்கும் பணியைச் செய்பவர்கள் அவ்விடத்தில் தடுப்பு சுவர் அல்லது தடுப்பு பேரிகார்டு எதுவும் வைக்காத காரணத்தினால் இரவு நேரம் இரண்டு சக்கர வாகனத்தில் வருபவர்கள் மற்றும் நடந்து வருபவர்கள் தெரியாமல் இருட்டில் அந்த சாலை பாலம் அமைக்கும் குழியில் விழும் நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு அந்த வழியாக வந்த 45 வயது மதிக்க சுப்பிரமணி என்பவர் சாலையின் நடுவில் பாலம் கட்டுவதற்காக குழி தோண்டி வைத்திருந்த இடத்தில் இரு சக்கரத்தில் வேகமாக வந்து குழிக்குள் இரு சக்கர வாகனத்துடன் உள்ளே விழுந்து இறந்துகிடந்துள்ளார். மேலும் யாரும் அவரை பார்க்கவும் முடியவில்லை என்பதாலும், அந்த வழியிலும் சுற்றுப்பகுதியில் யாரும் இல்லாததாலும் அவர் இரவில் இறந்து கிடந்தது இருட்டில் தெரியவில்லை. நேற்று இரவு முதல் இறந்து கிடந்ததும், நேற்று காலை தான் சிலர் பார்த்துள்ளனர். இதற்கிடையில் அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் சுப்பரமணியை காணவில்லை என்று பல இடங்களில் தேடி நேற்று காலை சம்பவ இடத்திற்கு வந்து பார்த்து பதறி உள்ளனர்.

இந்த விபரீதம் சம்பவம் சுப்பிரமணியம் வீட்டார் மற்றும் அப்பகுதி மக்களிடமும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சாலையில் குழிதோண்டி பணிசெய்யும் ஒப்பந்ததாரர்கள் மிக எச்சரிக்கையுடன் இதை கவனிக்காமல் விடுவதால் இந்த மாதிரி அசம்பாவித சம்பவம் நடந்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *