தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு 42 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கும், பரிசலுக்கும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 42 ஆயிரம் கன அடி அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரம் அடைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கபினி மற்றும் கேஆர்எஸ் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதியை ஒட்டியுள்ள பிலிகுண்டுலு, அஞ்செட்டி நாற்றம்பாளையம், தேன்கனிக் கோட்டை, மாரண்டஅள்ளி உள்ளிட்ட பல பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக எல்லைகளில் நேற்றுமுன்தினம் மாலை 5 மணிக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் வந்தது, ஆனால் நேற்று 42 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதனால் ஒகேனக்கல்லில் உள்ள சினி பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. செல்லும் நடைபாதை மீது தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்துள்ளது, குளிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது, பரிசளிக்கும் தடை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.