சிந்தனைத் துளிகள்
• நிகழ்காலத்தில் கவனம் எடுத்துக்கொள்.
எதிர்காலம் தன்னைத் தானே கவனித்துக் கொள்ளும்.
• கவலையை தீர்க்க வேண்டும் என்றால்..
அதன் ஆணி வேரை கண்டுபிடிக்க வேண்டும்.!
• பேச வேண்டிய நேரத்தில் மட்டும் பேசினால்..
உங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.!
• தன்னம்பிக்கை இருந்தால் தான்..
குறுகிய வட்டத்தில் இருந்து வெளியில் வந்து
மகிழ்ச்சியாக வாழ முடியும்.
• சவால்களை தைரியமாக எதிர்கொண்டால்
மனம் உறுதி அடையும்.