சிந்தனைத்துளிகள்
அறிவாளிகள் ஆயிரம் பேர் இருந்தாலும் பரவாயில்லை..
அதில் ஒருவரேனும் சிந்தனையாளராக இருக்காவிட்டால்…
உன் மனம் ஒன்றே உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம்
அது தெளிவாக இருக்கும் வரையில்
நீ ஒருவராலும் வீழ்த்தப்படுவதில்லை..!
நீ விழும்போது உனக்கு முதலில் உதவி செய்பவன்,
ஏற்கெனவே அவன் விழுந்து,
அதனால் ஏற்படும் வலியை உணர்ந்தவனாய் இருப்பான்
உயர்ந்த உன்னதமான கடமைகளை நிறைவேற்றவே
பிறந்தோம் என எப்போதும் எண்ணுங்கள்..!
புறத்தில் உள்ள வறுமையைக் காட்டிலும்
அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது..!