1950ல் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் நவராத்திரி பெருவிழாவில் ஏழிசை மன்னர் திரு. M.K.தியாகராஜ பாகவதர் அவர்களின் கச்சேரியில் எடுத்த அபூர்வ புகைப்படம். கோவிலுக்குள் இந்த கச்சேரியை வைத்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்ற காரணத்தால் கச்சேரியை கோவிலுக்கு வெளியில் புதுமண்டப முகப்பில் வைத்து கச்சேரியை நடத்தினார்கள்.
கச்சேரியின் விமர்சனம் அனைத்து நாளேடுகளில் வெகுவாக புகழ்ந்து எழுதினார்கள்.கச்சேரி நடந்த புதுமண்டபம் உள்ள கீழச் சித்திரை வீதி தொடங்கி தென் புறம் வடபுறம் சிம்மக்கல் வரையிலும் கூட்டமாக மக்கள் கட்சேரியைக் கேட்கவும் பாகவதரைப் பார்க்க கூடிய கூட்டம் என்று பிரம்மித்ததாக எழுதினார்கள். மைக் செட் போட்ட MMR ரேடியோஸ் குழாய் ஸ்பீக்கர் மட்டும் 300க்கு மேல் வைத்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் சித்திரை திருவிழா அளவக்கு கூட்டம் கூடியது, எனவும் மதுரை குழுங்கியது எனவும் புகழ்ந்து எழுதியது.இந்த அபூர்வ படம் கிடைக்க அதிக சிரமம் ஏற்பட்டு பின்னர் தான் கிடைத்தது.