அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தினால் எடப்பாடி பழினிச்சாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட பிளவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டது.
தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி ஒரு மனதாக உறுப்பினர்கள் மத்தியில் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் ஓபிஎஸ் தரப்பில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பொங்கி எழுந்து எடப்பாடியையும் அவரை சுற்றியுள்ள கூட்டத்திற்கும் பாடம் புகட்ட தயாராகி வருகின்றனர். அதை தொடர்ந்து கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் அலுவலகம் சூறையாடப்பட்ட நிலையில் எடப்பாடி ஆதரவாளர்கள் 15 பேருக்கும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 15 பேருக்கும் சம்மன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் ஓபிஎஸ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று டிஸ்சார்ஜ் ஆகி குடியரசு தலைவர் தேர்தலுக்கு வாக்கு அளிக்க சென்றுள்ளார். இதன் பிறகு ஓபிஎஸ் தன் ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு ஒரு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த ஆலோசனைக்கு பிறகு தமிழக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த கட்சியினாலே தூக்கி எறியப்பட்ட ஓபிஎஸ்-க்கு புதுவழி பிறக்குமா…??? அல்லது அந்த வழியை இவர் உருவாக்குவாரா…??? காத்திருப்போம்…