வடை, பஜ்ஜியை அச்சிட்ட பேப்பர்களில் வழங்க தடை விதித்து தூத்துக்குடிகலெக்டர் செந்தில் ராஜ் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டர் செந்தில் ராஜ் தலைமையில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், உணவு, வணிக நிறுவனங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
வடை, பஜ்ஜி, போன்டா, பப்ஸ், ஸ்வீட்ஸ் மற்றும் இதர கார வகைகளை பொதுமக்களுக்கு அச்சிட்ட பேப்பர் மற்றும் காகிதங்களில் பரிமாறுவதும், பார்சல் கட்டுவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. வணிகர்களின் இதுபோன்ற பாதுகாப்பற்ற பழக்க வழக்கங்களால் பொது சுகாதார நலனிற்கு கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் செந்தில் ராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வடை, பஜ்ஜி உள்ளிட்ட உணவு பொருட்களை அச்சிட்ட பேப்பர்களில் வழங்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி வினியோகம் செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.