ஓ.பி.எஸ்சும், டிடிவிதினகரனும் இணைந்திருப்பது மாயமானும், மண்குதிரையும் ஒன்றிணைந்ததைப் போலத்தான் என முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் சாடியிருக்கிறார்.
சேலம் ஓமலூரிலுள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் டிடிவி தினகரனும் ஒன்றிணைந்து இருப்பது மாய மானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்தது போல் ஆகும். அரசியல் ரீதியாக தன்னை ஏதும் செய்ய இயலவில்லை. இதன் காரணமாக மிலானி எனும் திமுக கட்சியை சேர்ந்தவர் வாயிலாக என் மீது வழக்கு தொடர்ந்து இருக்கின்றனர். அதனை சட்டப்படி சந்திப்போம். வருவாய் குறைவாக காட்டி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
என்ன உள்ளதோ அதை தான் காட்டி இருக்கிறேன். நான் எந்தவொரு தொழிலும் செய்யவில்லை. விவசாயம் மட்டும் தான் செய்கிறேன். அதோடு எந்த சொத்தையும் மறைக்கவில்லை. அதிலும் குறிப்பாக என் மீது எந்த சொத்தும் இல்லை. நான் இதுவரையிலும் என் பெயரில் எந்த சொத்தையும் வாங்கவில்லை” என்று அவர் கூறினார்.