• Sun. Mar 16th, 2025

நாளை சபரிமலையில் நடை திறப்பு… கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்

ByA.Tamilselvan

Sep 15, 2022

கொரோனா தொற்று காரணமாக சபரிமலையில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுபாடுகளை முழுமையாக நீக்க திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பார்கள். கொரோனா பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து சபரிமலை செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் தரிசனத்திற்கு செல்லும் முன்பு பரிசோதனை சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கெடுபிடிகளும் இருந்து வந்தன. இந்த நிலையில் கொரோனா பிரச்சினை குறைந்து வருவதால் அதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் தற்போது தளர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கோவிலுக்கு வருவது தொடர்பாக பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை முழுமையாக விலக்கி கொள்வது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. நாளை சபரிமலை நடைதிறப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.