• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

த.வெ.க சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா..,

ByR.Arunprasanth

May 3, 2025

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் காட்டாகெளத்தூர வடக்கு ஒன்றியம் வண்டலூர் பகுதி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தல் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி காட்டாங்கெளத்தூர் ஒன்றிய தலைவர் ராஜேஷ் முன்னிலையில், மாவட்ட செயலாளர் மேகன் ராஜ் தலைமையில், ஜெய்னுல் பாய், நந்தகோபால் , நித்தியானந்த், தியாகராஜன் , அருன் நாராயணன், ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் MGK மோகன ராஜா, பங்கேற்று ரிப்பன் வெட்டி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, நுங்கு வெள்ளரிக்காய், , கிர்னி பழம் மற்றும் ஜூஸ் , நீர் மோர் ஆகியவை வழங்கி சிறப்பித்தனர். அதனை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தனர்.

உடன் நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.