ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்டரயில் விபத்தில் 278 பேர் உயிரிழந்த நிலையில், ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஒரிசாவில் மீண்டும் ஒரு விபத்து என ரயில் விபத்துக்கள் தொடர்வது ரயில் பயணிகளை ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஊட்டி மலை ரயில் விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில் இருந்து இறங்கிய பெட்டியினை சரி செய்யும் பணி நடைபெறுவதால் அந்த வழிதடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.