ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்களில் பட்டும் படாமலும் தனது 125 ஆண்டுப் பாரம்பரியத்துடன் காட்சியளிக்கிறது அசெம்ப்ளி ரூம்ஸ் திரையரங்கு..
அரசினால் அமைக்கப்பட்ட வணிகநோக்கற்ற டிரஸ்டே இந்தக் கொட்டகையை நடத்துகிறது. இதற்குத் தமிழக கவர்னர் ஒரு புரவலர், மாவட்ட ஆட்சியரே டிரஸ்ட்டின் தலைவர் என்றால் நம்ப முடிகிறதா?

ஊட்டியில் தங்கிய ஆங்கிலேயரின் பொழுதுபோக்குக்காக உருவானது இந்தத் தியேட்டர். அப்போதைய சென்னை மாகாண கவர்னர் வெலிங்டன் சீமானின் மனைவி ஐம்பதாயிரம் ரூபாய்க்கு இக்கொட்டகையை பிரவுன் என்பவரிடம் இருந்து வாங்கினார். அதில் அன்றாடம் ஆங்கில நாடகங்கள், பேண்டு வாத்திய இசை என அரங்கேறியதாம். பின்னர் திரைப்படங்கள் கோலோச்சத் தொடங்கிய பின்னர், இதில் ஆங்கிலப் படங்கள் மட்டுமே திரையிடப்பட்டு வந்தனவாம்.

1939ஆம் ஆண்டு முதல் இரண்டு ரூபாய், ஒரு ரூபாய், 50 பைசா என்ற கட்டணங்கள் வசூலித்ததாம் இந்தத் தியேட்டர். இதில் திரையிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் ‘சிந்தாமணி’. அது 4000 ரூபாய் வசூலித்து சாதனை செய்ததாம். இந்தத் திரையரங்கில் மைசூர் மகாராஜா, அண்ணாதுரை, அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் படம் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான திரையரங்குகள் மூடுவிழா கண்டுவரும் இந்தக் காலகட்டத்தில் 125 ஆண்டுகால பாரம்பரியத்தை தொடர்ந்து வருவது ஊட்டிவாசிகளுக்கு மட்டுமல்ல திரை உலகினருக்கே பெருமைக்குரிய விஷயம்தான்.
மேலும் இந்த திரையரங்கில் ‘அசெம்ஸ் சினி மியூசியம்’ அமைந்துள்ளது.
இந்த திரையரங்கில், 1950 களில் பயன்படுத்தப்பட்ட இரண்டு ஜெர்மன் Bauer B6 ஃபிலிம் புரொஜெக்டர்கள் உள்ளன.
தற்போது அருங்காட்சியகமாக விளங்கும் இந்த திரையரங்கில் பயன்படுத்தப்பட்ட பழைய உபகரணங்கள், திரையரங்கில் பயன்படுத்தப்படும் பழங்காலப் பொருட்கள் இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான உபகரணங்கள் இன்னும் நல்ல வேலை நிலையில் உள்ளன.
ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா செல்லும் ரோட்டில் உள்ள இந்த பழமையை சொல்லும் அசெம்ளி ரூம்ஸ் திரையரங்கையும் காண தவற வேண்டாம்.
- மாலை அணிந்து கொடுங்கலூர் சென்ற பக்தர்கள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவிலுக்கு மாலை […]
- ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மஞ்சூரில் ஆர்ப்பாட்டம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் குந்தா வட்டார காங்கிரசின் சார்பில் ராகுல்காந்தி அவர்கள் மீது […]
- குந்தா அணையில் குப்பைகளை அகற்ற முன்னோட்டம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா அணையில் தங்கி உள்ள குப்பைகள் செடி, கொடி இலை அகற்றும் […]
- 2022-2023 ஆம் ஆண்டிற்கான கணிதக் கண்காட்சிநீலகிரி மாவட்டம் மஞ்சூர் மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா நினைவு அரசு பெண்கள் உயர்நிலைப் நிலைப் […]
- தேசிய பங்குசந்தை பட்டியலில் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்தமிழ் திரையுலகில் அதிக படங்களை தயாரித்து வரும் நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், […]
- மதுரை அருகே சந்தன கட்டைகள் கடத்திய 2 பேர் கைதுமதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் சந்தன மரங்கள் உள்பட ஏராளமான மரங்கள் உள்ளன இவற்றை கடநத்தி […]
- லைஃப்ஸ்டைல்:புதினா சுருள்சப்பாத்தி: தேவையானவை:கோதுமை மாவு – 2 கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு […]
- காவிய நாயகி வேடத்தில் சமந்தா..!காளிதாஸ் எழுதிய புராண கதையான சகுந்தலம் என்ற திரைப்படத்தில் காவிய நாயகி வேடத்தில் சமந்தா நடித்துள்ளார்.தென்னிந்தியாவின் […]
- சூதாட்டத்தை ஆடிவிட்டு அதற்கு ஆதரவாக நடிகர்கள் விளம்பரம் செய்யவேண்டும்-விக்கிரமராஜா பேட்டிஆன்லைன் சூதாட்டத்தை கவர்னர் தடை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் ஆன்லைன் வெளிநாட்டு நிறுவனங்களையும் ஒட்டு […]
- ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டதுராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது எம்.பி பதவியை பறித்து […]
- முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கல்தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கியமதுரை 70 வது […]
- ஏப்ரல் மாதம் வெளியாகும் ” ரஜினி ” படம்வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல், கோவை பாலசுப்பிரமணியம் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் […]
- N4 திரை விமர்சனம்சென்னை காசிமேடு பின்னணியில் உருவாகியுள்ள படம். அங்குள்ள காவல்நிலையத்தின் எண், என்4 என்பதால் படத்துக்கு இந்தப்பெயர். […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் யாரையும் நம்பி யாருக்காகவும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்;இறுதியில் நம்மை கோமாளி ஆகிவிட்டு அவர்கள் ஒன்றாக […]
- இன்று நோபல் பரிசு பெற்ற பீட்டர் யோசப் வில்லியம் டெபி பிறந்த தினம்X-கதிர் சிதறலில் சிறப்பான பங்களிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற பீட்டர் யோசப் வில்லியம் டெபி பிறந்த […]