தமிழக சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் தனித் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடைக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2வது முறையாக மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்து கொண்டதைத் தடுக்க கடந்தாண்டு அக்டோபர் மாதம், அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.அக்.19-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தில், இதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மசோதாவில் சில விளக்கங்களை ஆளுநர் கேட்டார். அதற்குஉடனடியாக பதில் அளிக்கப்பட்டது. பின்னர், 4 மாதங்கள் கழித்து, அந்த சட்ட மசோதாவை, தமிழகஅரசுக்கு சட்டமியற்ற அதிகாரமில்லை என்று கூறி ஆளுநர் திருப்பியனுப்பினார்
அதையடுத்து சட்டமன்றத்தில் 2வது முறையாக மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில் ஒப்புதல் அளித்துள்ளார். முன்னதாக இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் தனித் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைக்கு சட்டமசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருப்பது குறிப்படத்தக்கது.
இச்சட்டம் அமலாகும் நிலையில் ஆன்லைனில் ரம்மி விளையாடினால் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை ₨5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை, அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.