தொழில்நுட்ப பணிகள் நடைபெறுவதன் காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஆன்லைன் பட்டா மாறுதல் இணையதளம் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குனர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி இன்று முதல் வருகிற 31ஆம் தேதி வரை ஆன்லைன் பட்டா மாறுதல் இணையதளத்தில் தொழில்நுட்ப பணிகள் நடைபெற உள்ளது. அதன்படி தமிழ் நிலம் மென்பொருளில் விவசாயிகள் விவர பதிவேடு தொடர்பான தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இன்று முதல் வருகிற 31ஆம் தேதி வரை ஆன்லைன் பட்டா மாறுதல் விண்ணப்பம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணி முதல் 31ஆம் தேதி மாலை 4 மணி வரை பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் இணையதளம் செயல்படாது. மேலும் அதன்படி https://tamilnilam TN.gov.in/Revenue/ OR https://eservices.tn.gov.in/ eservicesnew/index.html ஆகிய இணையதள சேவைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.