• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

இந்திய கால்பந்து அணிக்கு ஒரு கோடி பரிசு.., ஒடிசா முதல்வர் அறிவிப்பு..!

Byவிஷா

Jun 20, 2023

இந்திய கால்பந்து அணிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என ஒடிசா முதல்வர் அறிவித்துள்ளார்.
தற்போது ஒடிசாவில் சர்வதேச கால்பந்து அணிகள் கலந்து கொள்ளும் இண்டர் காண்டினெண்டர் கோப்பை கால்பந்து போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிச் சுற்றில் இந்தியா மற்றும் லெபனான் அணிகள் மோதின. இந்தப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்றது. இந்த இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து இறுதிச் சுற்றில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் லெபனான் அணியை சாம்பியன் பட்டம் வென்றது.

போட்டியில் இந்திய அணி தரப்பில் கேப்டன் சுனில் சேத்ரி 46-வது நிமிடத்திலும், லாலியன்{வாலா ஷாங்க்டே 66-வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர். சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கால்பந்து அணிக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.