• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சென்னையில் தொடர்மழை எதிரொலி..,2 நாட்களாக விமானசேவை பாதிப்பு..!

Byவிஷா

Jun 20, 2023

சென்னையில் தொடர்மழை எதிரொலியால் 2 நாட்களாக விமானசேவை பாதிப்படைந்துள்ளது.
கடந்த 2 தினங்களாகத் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாகச் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் லேசான தூறல் விழுந்த படி காணப்படுகிறது. நேற்று கனமழை காரணமாகச் சென்னை விமான நிலையத்திற்கு வரவேண்டிய பல விமானங்கள் பெங்களூரு விமான நிலையத்துக்குத் திருப்பி விடப்பட்டன. இதைப் போல் சென்னையில் இருந்து கிளம்பும்போது விமானங்கள் தாமதமாகக் கிளம்பியது, தவிர ஒரு சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன
இன்றும் தொடர் மழையின் காரணமாக சென்னையில் 2 ஆம் நாளாக இன்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய ரன்வே பகுதியில் தேங்கி இருக்கும் மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகளில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை – சென்னை மற்றும் சென்னை – இலங்கை செல்லும் 2 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கை – சென்னை ஏர் இந்தியா விமானமும், அந்தமான் செல்லும் ஏர் இந்தியா விமானமும் தாமதமாகப் புறப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.