• Thu. Dec 12th, 2024

ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் பெண்கள் சுவாமி தரிசனம்…

Byகுமார்

Jul 22, 2022

ஆடி மாதம் முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு மதுரையில் அனைத்து அம்மன் கோவில்களிலும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் .

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக போற்றப்படுவதால் அனைத்து அம்மன் கோவில்களிலும் குறிப்பாக வெள்ளிகிழமைகளில் பக்தர்கள் ஏராளமானோர் அம்மனை தரிசிப்பர் . அந்த வகையில் சிறப்பு பெற்ற வெள்ளியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்தனர்.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உட்பட்ட அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அதிகாலை முதல் ஆயிரகணக்கான பக்தர்கள் அம்மனை வழிபாடு செய்தனர் .

மேலும் நாகதேவதை மற்றும் அரசமரம் விநாயகர் ஆகியோரை வழிபட்ட பக்தர்கள் ,வெற்றிலை , பாக்கு , மஞ்சள் , ஆகியவற்றை வைத்து பூஜை செய்தும் , மாவிளக்கு படைத்தும் , பக்தர்களுக்கு கூழ் வழங்கியும் பெண்கள் சிறப்பு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர் .