• Mon. Sep 14th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மின்வாரியத்திற்கு மின்மாற்றிகள் உள்ளிட்ட உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு..,

ByKalamegam Viswanathan

Aug 19, 2026

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின்மாற்றிகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

மின்வாரியத்திற்கு உபகரணங்கள் வழங்கிய நிறுவனங்களின் உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, மதுரை அவனியாபுரத்தில் ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர் பாஸ்கர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மின்வாரிய உபகரணங்கள் கொள்முதல் தொடர்பான ஆவணங்கள், பணப் பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.