• Sat. Apr 27th, 2024

மதுரை அப்போலோ மருத்துவமனையில் இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை முறை அறிமுகம்..

Byகுமார்

Jul 22, 2022

புதிய நவீன தொழில்நுட்பத்துடன் இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை முறையை மதுரை அப்போலோ மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்ப்டது. என்டோ வாஸ்குலர் வெயின் & ரேடியல் ஆர்டரி ஹர்வெஸ்டிங் சிஸ்டம் என்கிற புதிய சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தி அதன் மூலம் ஒரு புதிய மைல்கல்லை அடைந்துள்ளது மதுரை அப்போலோ மருத்துவமனை. கடந்த இரண்டு ஆண்டுகளாக 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் இப்புதிய சிகிச்சை முறையின் மூலம் பயன் பெற்றுள்ளனர். பைபாஸ் அறுவை சிகிச்சை மூலம் ஏற்படும் வலி மற்றும் பின்விளைவுகளுக்கு தீர்வாக இந்த சிகிச்சை முறை அமைந்திருக்கிறது.

பைபாஸ் அறுவை சிகிச்சையில் இருதயத்தின் ரத்த ஓட்டத்தை சீர்படுத்த காலில் உள்ள ரத்த நாளத்தை (நரம்பு) கொண்டு இதயத்தில் பொருத்தப்படுகிறது. பொதுவாக மூன்று அல்லது அதற்கு மேல் கோரோனரி ஆர்டரிகள் பைபாஸ் செய்யப்படுகிறது இதற்காக ரத்தநாளம், நரம்புகளில் இருந்து எடுக்கப்பட்டு இதயத்திற்கு ஏற்ற ரத்தக்குழாயாக ஆக மாற்றப்படுகிறது. இந்த சிகிச்சையின் மூலம் நோயாளிகள் விரைவாக குணமடைவது மட்டுமல்லாமல் அறுவை சிகிச்சையின் மூலம் உண்டாகும் வலி மற்றும் பக்க விளைவுகள் குறைக்கப்படுகிறது. உலகளவில் இப்பொழுது இருதய அறுவை சிகிச்சை ஒரு பாதுகாப்பான அறுவை சிகிச்சையாக மற்றும் 99% வெற்றிகரமான சிகிச்சை முறையாக கருதப்படுகிறது. கோரோனரி ஆர்டரி நோய்க்கு இதுவே சிறந்த சிகிச்சை முறையாக கருதப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக பைபாஸ் அறுவை சிகிச்சையில் வெற்றி சதவீதம் உயர்ந்து காணப்படுகிறது ஸ்டன்ட் பொருத்துதல் அல்லது மருந்துகளின் மூலம் குணப்படுத்துதளைவிட பைபாஸ் அறுவை சிகிச்சை மூலம் குணம் அடைந்தவர்களின் ஆயுள் அதிகமாகவே காணப்படுகிறது. கோரோனரி ஆர்டரி நோய்க்கான சிகிச்சை முறையில் குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சையே சிறந்த முறையாக மேலோங்கி காணப்படுகிறது, மதுரை அப்போலோ மருத்துவமனை, இதுவரை 8000க்கும் மேற்பட்ட இருதய அறுவை சிகிச்சைகள் 99% வெற்றி சதவீதத்துடன் செய்யப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனை இருதய சிகிச்சை பிரிவு எக்மோ (ECMO) மற்றும் ஐஏபிபீ (IABP) போன்ற அட்வான்ஸ் லைப் சப்போர்ட் டிவைஸ் பயன்படுத்தபடுகிறது. புதிய மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்துவதில் அப்போலோ மருத்துவமனை என்றுமே ஒரு முன்னோடியாக செயல்பட்டு வருகிறது என்று இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் V.ஸ்ரீதர் தெரிவித்தார்.

மேலும் செய்தியாளர் சந்திப்பின்போது மதுரை மண்டல, முதன்மை இயக்க அலுவலர் நீலக்கண்ணன், மார்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் மணிகண்டன் மற்றும் மருத்துவ சேவை இணை இயக்குநர் பிரவீன்ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *