நடிகர் பஹத் பாசில் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம், புஷ்பா மற்றும் மாலிக் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாகின.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பஹத் பாசிலுக்கு மலையாள மொழி தாண்டியும் ரசிகர்கள் ஏராளம். அவரின் படங்கள் தமிழகத்திலும் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் நடித்திருந்த விக்ரம் மற்றும் புஷ்பா அகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக அமைந்தன. அடுத்து அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘மலையன் குஞ்சு’ திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. தொடர்ந்து ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் எனக் கலக்கி வரும் அடுத்து பரிசோதனை முயற்சியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தில் பஹத் பாசில் மட்டும் ஒரே ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இந்த திரைப்படத்தை அவரின் தந்தை பாசில் இயக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. இதே போன்று பார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியானது குறிப்பிடத்தக்கது.