• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

இந்திய தொழிற்சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம்..,

ByP.Thangapandi

Aug 10, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொழிற் சங்கம், இந்திய தொழிற்சங்கம் சார்பில்
மாவட்ட உதவி தலைவர் மூர்த்தி தலைமையில், மாநில உதவி தலைவர் சுரேஷ்குமார் முன்னிலையில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.,

இதில் புதிய தொழிலாளர் தொகுப்பு சட்டங்கள் நான்கை ரத்து செய்ய வேண்டும், விபிஜி ராம் ஜி திட்டத்தை கைவிட்டு மீண்டும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி சட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்த மசோதா 2025 ஐ வாபஸ் பெற்வேண்டும், மின்சாரதுறையை தனியார் மயமாக்கபடுவதை கைவிட வேண்டும், விவசாயிகளின் வங்கி கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பி பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,

இதில் பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 70 க்கும் மேற்பட்டோரை உசிலம்பட்டி நகர் போலீசார் கைது செய்து வங்கி எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.,.