• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

மதுரை அருகே திமுக சார்பில், இளநீர் பந்தல்

ByN.Ravi

May 1, 2024

மதுரை திருப்பரங்குன்றம் 16 கால் பண்டபத்தில், கோடை வெயிலில் அவதிக்கு உள்ளாகும் பொது மக்களுக்கு நீர், மோர், தண்ணீர் பழம், பழரசம் சூஸ், சர்பத் இளநீர்,
கொடுத்து கூல்படுத்திய, மதுரை தெற்கு மாவட்டதிமுக இளைஞரணியினர்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அதன் சுற்றியுள்ள பகுதிகளில், கோடை வெயில் 104 டிகிரி வரை உச்சத்தை எட்டி உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மழை இல்லாமல் வெயில் வெளுத்து வாங்கி வருகின்றது. இதனால், மக்கள் வெயிலின் தாக்கத்தால் வாடி வதங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் மக்களை கோடை வெயிலில் இருந்து பாதுகாக்கவும், பொதுமக்கள் கோடை வெயில் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள இளைஞரணி சார்பாக நீர் மோர், தண்ணீர் பழம், வெள்ளரிப்பிஞ்சு போன்றவைகளை பொது மக்களுக்கு கொடுத்தனர்.
விழாவிற்கு மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயலாளர் விமல், மதுரை மாநகராட்சி மண்டலம் 5 தலைவர் சுவிதா விமல், பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டி, ஆறுமுகம், டிப்போ ரவி கவுன்சிலர் சக்தி ரமேஷ், ரவிசந்திரன், ஆகியோர் கலந்து கொண்டனர். 16 கால் மண்டபத்தில் பொதுமக்களுக்கு நீர் மோர், தண்ணீர் பழம், பழரச சூஸ், சர்பத், ரோஸ் மில்க் போன்றவைகளை பொது மக்களுக்கு வழங்கினர்.
பொதுமக்கள் நீர்மோர் தண்ணீர் பழம் சர்பத் பழரசம் ஆகியவற்றை விரும்பி ஆவலுடன் வாங்கி சாப்பிட்டு கோடை வெயிலின் தாக்கத்தை குறைத்துக் கொண்டனர்.