• Wed. Jun 10th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

பிரிட்டனில் ஆட்டத்தை தொடங்கிய ஒமிக்ரான். . முதல் பலியால் அச்சத்தில் மக்கள்

பிரிட்டனின் ஒமிக்ரானால்பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.


தென் ஆப்பிரிக்காவில் தோன்றியுள்ள கொரோனா வேரியண்ட் ஒமிக்ரான், பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய வகை திரிபானது வேகமாக பரவும் எனவும், அதற்கு எதிராக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள் குறைவான செயல் திறனைத் தான் கொண்டிருக்கும் எனவும் விஞ்ஞானிகள் சிலர் தெரிவித்துள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது டெல்டா திரிபை விட பன்மடங்கு அதிகம் என மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஒமிக்ரான் திரிபு தற்போது 38 நாடுகளுக்கும் மேலாக பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிட்டனை பொறுத்தவரை ஒமிக்ரான் தொற்று படு வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுக்குள்கொண்டு வர அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக, தடுப்பூசி போடும் பணிகளையும் அந்நாட்டு அரசு துரிதப் படுத்தியுள்ளது. மேலும், பூஸ்டர் டோஸ் போடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த நிலையில், பிரிட்டனின் ஒமிக்ரானால்பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.