

மதுரை தெற்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட தென்பலஞ்சியில், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. சுமார் ஐந்து லட்சம் ரூபாய் செலவில், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் மதன், விமல், சுரேஷ் ஆகியோர் ஏற்பாட்டில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
இப்போட்டியை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் துவக்கி வைத்தார். இந்த கபடி போட்டியில் திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 110 கபடி அணிகள் பங்கேற்றன. இரண்டு நாள் நடைபெற்ற கபடி போட்டியில் முதல் பரிசை மதுரை கபடி அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு 25000 ரூபாய் மற்றும் 21 அடி உயரம் கொண்ட வெண்கல கோப்பையை தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன் வழங்கினார். இரண்டாவது மூன்றாவது இடத்தில் வெற்றி பெற்ற 15 அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டியன், ஒன்றிய செயலாளர் பெரியசாமி, இளைஞர் அணி அமைப்பாளர்கள் வசந்த், காளி, சின்ன கருப்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.
