• Fri. Mar 29th, 2024

கங்கை ஆரத்தி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு

வாரணாசியில் நடைபெறும் கங்கை ஆரத்தி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.
வாரணாசியில் ரூ.339 கோடி மதிப்பில் காசி விஸ்வநாதர் வளாகத் திட்டத்துக்காக 300 சிறுகடைகள் கையகப்படுத்தப்பட்டன. அதுமட்டுமின்றி 1400 கடைக்காரர்களிடம் சுமூகமாகப் பேசி, இழப்பீடுகளை வழங்கி இடங்களைக் கைப்பற்றி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக காசி விஸ்வநாதர் திட்டம்-1ன் மூலம் 23 கட்டடங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.


முதல் நிகழ்ச்சியாக கால பைரவர் கோயிலுக்கு சென்று அவர் வழிபாடு நடத்தினார். இதனைத் தொடர்ந்து காரில் வாரணாசியின் வீதிகள் வழியாக பயணம் செய்த பிரதமர் மோடிக்கு உள்ளூர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து மாலை வாரணாசியில் நடைபெறும் கங்கை ஆரத்தியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.மேலும் அவருடன் உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் கலந்து கொண்டுள்ளார்.


பிரதமர் மோடியின் வருகையை , 55 உயர்வகை கேமராக்கள், நான்கு ஜிம்மி ஜிப்கள் மற்றும் ஒரு பெரிய ட்ரோன் மூலம் கவரேஜ் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தூர்தர்ஷனில் இருந்து சுமார் 100 பேர் கொண்ட குழு, 55 ஒளிப்பதிவாளர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் இதர பணியாளர்கள் முகாமிட்டிருந்தனர். இந்த நிகழ்வை காண்பதற்காக 3,000-க்கும் மேற்பட்டோர் காசியில் கூடியதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *