• Sun. Mar 16th, 2025

தென்காசி அருகே பிட்பாக்கெட் அடித்த மூதாட்டி கைது

Byதரணி

Jun 2, 2023

தென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையத்தில் பிட்பாக்கெட் அடித்த மூதாட்டியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
புளியங்குடியில் இருந்து சேந்தமரம் பேருந்தில் கணேசன் மனைவி சுதா சென்று கொண்டிருந்தார் அப்போது கழுகுமலை பள்ளிவாசல் தெரு, காஜா முஹைதீன் மனைவி பாத்திமுத்து (70) இவர் இலவச அரசு பேருந்துகளில் ஏறி பிட்பாக்கெட் அடிப்பதை தொழிலாக வைத்துள்ளார் நேற்று புளியங்குடியில் தனது கைவரிசையை காட்டியுள்ளார் சுதாவிடம் பிக்பாக்கெட் அடித்ததை பக்கத்திலிருந்த நபர் பார்த்து பிடித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார் அதன் பெயரில் புளியங்குடி சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் மூதாட்டியை கைது செய்து கொக்கிரகுளம் சிறையில் அடைத்தார் மூதாட்டி பிக்பாக்கெட் அடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது