• Tue. Oct 3rd, 2023

கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீடு

ByA.Tamilselvan

Jun 2, 2023

கலைவாணர் அரங்கில் நடைபெறும், நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினையை மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி ,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டனர்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சென்னை கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சியினை முதலமைச்சர் பார்வையிட்டார். அப்போது விழாவில் மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமைச்சர்கள் துரைமுருகன், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, சாமிநாதன், செந்தில்பாலாஜி ராஜகண்ணப்பன், உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கலைவாணர் அரங்கில் நடைபெறும், நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினையை மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, முதலமைச்சர் மு க ஸ்டாலின் இணைந்து வெளியிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *