துணிவு திரைப்படம் வரும் 11ஆம் தேதி வெளியாக உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நடிகர் அஜித்குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3ஆவது முறையாக இணைந்துள்ள ‘துணிவு’ திரைப்படம் வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இரண்டு படங்களும் பொங்கலுக்கு மோதுவது தெரிந்த செய்தி என்றாலும், வெளியீட்டு நாள் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், துணிவு வரும் 11ஆம் தேதி புதன்கிழமை வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.