• Tue. Dec 10th, 2024

அக். 17ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல்…

ByA.Tamilselvan

Aug 29, 2022

காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்து வருவதால் கட்சியில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்கு பகிரங்க கடிதம் எழுதினர். கட்சிக்கு முழு நேர தலைவரை விரைவாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலை வரும் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மறைந்து 7 ஆண்டுகள் கழித்து 1998ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். தொடர்ந்து 2017ஆம் ஆண்டு வரை தலைவராக இருந்தார். 2017ஆம் ஆண்டு தலைவராக நியமிக்கப்பட்ட ராகுல் காந்தி, 2019 பொதுத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை தொடர்ந்து தலைவர் பதவியிலிருந்து விலகினார்.