


சசிகலா தமிழகம் முழவதும் சுற்றுபயணம் மேற்கொண்டுவருகிறார். அதேபோல ஓபிஎஸ்,இபிஎஸ் ஆளுக்கொரு பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளனர்.
அதிமுகவில் ஓபிஎஸ்,இபிஎஸ் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வரும் ஜூலை 11 ம்தேதி மீண்டும் பொதுக்குழு கூடவுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ஓபிஎஸ் மாவட்ட வாரியாக தொண்டர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார். அதன்படி ஓபிஎஸ் இன்று மதுரை செல்கிறார். மறுபுறம் இபிஎஸ் சேலத்திற்கு பயணம் செய்யவுள்ளார்.

அதே போல சசிகலா இன்று முதல் தொண்டர்களை சந்தித்து ஆதரவு கோருகிறார். அதற்காக காலை 11மணி அளவில் திருத்தணியில் இருந்த பயணத்தை தொடங்குகிறார். ஆக மொத்தத்தில் ஓபிஎஸ்,இபிஎஸ்,சசிகலா வும் ஆளுக்கொரு பாதையில் பயணித்து கொண்டிருக்கிறார்கள்.


