

ஓ.பன்னீர்செல்வம் ,டிடிவி தினகரனோடு ரகசியமாக பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:- ஒற்றைத் தலைமை தொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் ஓபிஎஸ் ஒத்துழைக்கவில்லை. ஒற்றை தலைமைக்கு ஆதரவளித்தால், ஓபிஎஸ் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். குடும்ப நலனில் மட்டுமே ஓபிஎஸ் அக்கறை காட்டினார். அதிமுக தொண்டர்களை கண்டுகொள்ளவில்லை. அதிமுகவுக்கு நம்பிக்கைக்குரிய, வலியுமையான தலைமையே தேவை. அதிமுக இரட்டைத் தலைமையால் புரிதல் குழப்பம் ஏற்பட்டு தேர்தலில் கடைசியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர். ஜெயலலிதா மறைவுக்குபின் கண்ணீரில் தவித்தவர்களுக்கு ஈபிஎஸ் மக்கள் மனதில் நம்பிக்கை விதைத்தார். டிடிவி தினகரனோடு ஓபிஎஸ் எதற்காக ரகசியமாக பேச வேண்டும்? இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.