நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை, ரயில்களில் அழைத்துச் செல்ல வசதியாக, ஐ.ஆர்.சி.டி.சி.,யில், டிக்கெட் முன்பதிவு விரைவில் துவங்க உள்ளது.ரயில் பயணத்துக்கு, 82 சதவீதம் பயணியர், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., இணைய தளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இதுதவிர, ஆம்னி பஸ்கள் டிக்கெட் முன்பதிவு, உணவுகள் ‘ஆர்டர்’ செய்வது, ஓய்வு அறைகள், ‘வீல் சேர்’ முன்பதிவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற பயன்படுத்துகின்றனர்.நாய், பூனை, பறவை போன்ற செல்லப் பிராணிகளை, ரயில்களில் ஏற்றிச் செல்லும் வசதி இருக்கிறது. ஆனால், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், அதற்கான முன்பதிவு வசதி இல்லை.
பயணியரின் கோரிக்கையை ஏற்று, ஐ.ஆர்.சி.டி.சி.,யில், டிக்கெட் முன்பதிவு வசதியை உருவாக்க, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.