

வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 26ம் தேதி நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் வாரம் 2-வது வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மழை நீர் வடிகால் தூர்வாரும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. ஆறு, குளம், கால்வாய்கள், தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தும் வேலைகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணிகளை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். இதையொட்டி ஒவ்வொரு பகுதியிலும் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் எந்த அளவு முடிந்துள்ளது என்பது பற்றி ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 26-ந் தேதி அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி உள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அரசுத்துறை செயலாளர்கள், மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்பு உயர் அதிகாரிகள் மற்றும் போலீஸ் தீயணைப்பு அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.
