தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியுடன் தனிப்பட்ட கருத்து வேறுபாடு கிடையாது என கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் பேசும் போது , “ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் ஆகியோரின் கருத்தை நான் வரவேற்கிறேன்.அனைவரும் இணக்கமாக செயல்பட்டால்தான் திமுக அரசை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்ற முடியும் என்ற ஒரு உயரிய நோக்கத்தோடு அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். .தமிழக மக்கள் பெரிய எதிர்பார்ப்போடு திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தனர்.ஆனால், மக்களை ஏமாற்றுகிற விதமாகத்தான் திமுக ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கான பலனை அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் அனுபவிப்பார்கள்.
யாரோடும் எங்களுக்கு அரசியல் ரீதியாக எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. எடப்பாடி பழனிசாமியுடன் கூட எனக்கு தனிப்பட்ட கருத்து வேறுபாடு கிடையாது.அவருடைய குணாதிசயத்தைத் தான் நான் திரும்ப திரும்ப கண்டிக்கிறேனே தவிர, தனிப்பட்ட விரோதம் யாரோடும் வைத்துக் கொள்வது கிடையாது. எந்த கட்சியோடும் கிடையாது என்று கூறினார்.
