பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு பணம் வழங்காததால் பொங்கல் தொகுப்பு வாங்க ஆளில்லை.
தமிழகத்தில் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அரிசிபெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி பெரம்பலூர் சமத்துவபுரம் நியாய விலை கடையில் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தொடங்கி வைத்தார்.
இந்த சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு (9ம்தேதி முதல் 12ம்தேதி முடிய அனைத்து ரேசன் கடைகளிலும் வழங்கப்படுகிறது.
வருடம் வருடம் பொங்கல் தொகுப்பில் நியாய விலை கடை மூலம் தமிழக அரசு பணம் வழங்கி வந்த நிலையில் இந்த வருடம் பணம் இல்லாமல் பொங்கல் தொகுப்பு மட்டும் தருவதால் பொதுமக்கள் பொங்கல் தொகுப்பு வாங்க இந்த ஆண்டு ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக நியாய விலை கடை வெறிச்சோடி காணப்படுகிறது.