• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பழனி கோயில் முன்னாள் இணை ஆணையரிடம் விசாரணை..,

ByS.Ariyanayagam

Jul 22, 2026

பழனி கோயில் முன்னாள் இணையானையர் மாரிமுத்துவிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். பழனி கோயில் நில மோசடி வழக்கு முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்துவிடம் நடைபெற்ற 6 மணி நேரமாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நிறைவு அடைந்தது.

பழனி கோயில் ரூ. 100 கோடி நில மோசடி வழக்கு சம்பந்தமாக திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில், பழனி கோயிலின் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து,, ஓய்வுபெற்ற தாசில்தார் மாரியப்பன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி சின்னச்சாமி மற்றும் அறநிலையத்துறை ஆய்வாளர் சிவனேசன் ஆகிய நால்வரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிபிசிஐடி தென்மண்டல காவல் கண்காணிப்பாளர் ஷாஜிதா தலைமையில் நடைபெற்ற 6 மணிநேர விசாரணை நிறைவடைந்தது.