• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

சிம்பு மாதிரி யாருக்கும் தைரியமில்லை – சீக்ரெட்டை உடைத்த நடிகர்.!

இயக்குனர் மணிபாரதி இயக்கத்தில், ஸ்ரீகாந்த் நடித்துள்ள திரைப்படம் தி பெட். இந்த படத்தை ஆஞ்சநேயா ரெடக்ஷன் தயாரிக்க சிருஷ்டி டாங்கே ஹீரோயினாக நடித்துள்ளார். இதில் டிக்டாக் புகழ் திருச்சி சாதனா ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்பட விழாவில் நடிகர் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு பேசிய பொழுது, “இந்த திரைப்படத்தின் தலைப்பு மற்றும் கதையை கேட்டு விட்டு முதலில் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. அதற்கு காரணம் இந்த படம் சர்ச்சையாகும் என்ற பயம் எனக்கு ஏற்பட்டது.

மேலும் இயக்குனர்கள் கதையைக் கூறும் பொழுது, தயாரிப்பாளர்ள் ஒப்புக்கொள்வார்களா என்பதும் கேள்விக்குறிதான். நாம் ஒப்பந்தம் செய்த பின்னர் படத்தில் இருந்து விலகவும் முடியாது. பின்னர் அப்படி செய்தால் அதை பலருடன் ஒப்பிட்டு நம் இமேஜை கெடுத்து விடுவார்கள்.

நடிகர் சிம்பு அளவிற்கு யாராலும் தைரியமாக இருக்க முடியாது. பலரால் சிம்புவை சரியாக புரிந்து கொள்ள முடியாது. அவர் ஒரு அற்புதமான ஹீரோ. ஒரு படத்தில் ஒப்புக்கொண்டால் தன்னை முழுமையாக இயக்குனரிடம் ஒப்படைத்து விடும் குணமுடையவர். இயக்குனர்கள் கதையை சொதப்பி படம் எடுத்தாலும் முழுமனதோடு நடிக்கின்ற அளவு திறமை மிக்கவர்.” என்று தெரிவித்துள்ளார்.