பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா வரும் 15 ம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாடார் மகாஜன சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த ஊரான விருதுநகரில் வரும் 14ஆம் தேதி 15ஆம் தேதி இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் விருதுநகரில் உள்ள கே.வி. சாலா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.

விழாவினை முன்னிட்டு முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமை வகித்தார். மண்டலச் செயலாளர் கனக ரத்தினம் மற்றும் மகாஜன சங்க நிர்வாகிகள், மகளிர் சேனை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




