• Wed. Jul 1st, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு குற்றம் சாட்டி கண்டன ஆர்ப்பாட்டம்..,

ByP.Thangapandi

Jul 1, 2026

மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் பெயரை மாற்றி புதிய பெயருடன் திட்டத்தை அமல்படுத்தியதற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புகள் எழுந்துள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி சங்கம் சார்பில் 150 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் புதிதாக அமல்படுத்தப்பட்ட அரசாணைக்கு எதிராகவும், கண் கருவிழி, கைரேகை பதிவு மூலம் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிப்பு செய்து வருவதாகவும், முறையாக பணி வழங்கப்படுவதில்லை என குற்றம் சாட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள், கண்டன கோசங்கள் எழுப்பியவாறு மத்திய அரசின் அரசாணையை கிழித்த மாற்றுத்திறனாளி சங்கத்தினர் கிழித்து எரிந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 150 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.