• Wed. Jul 1st, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவனை வளாகத்தில் தேசிய மருத்துவர்கள் தின விழா..,

Byமுகமதி

Jul 1, 2026

இன்று 01.07.2026 தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை மிட்டவுன் ரோட்டரி சங்கம் இணைந்து தேசிய மருத்துவர்கள் தினவிழா மருத்துவமனையின் வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.சலீம் விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவிற்கு மிட்டவுன் ரோட்டரி சங்கத்தின் தலைவர் டாக்டர்.உதயசூரியன், செயலாளர் சண்முகராஜ், முன்னாள் தலைவர் லோகநாதன் மற்றும் உறுப்பினர் திருமதி.நிஷா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இருதய நல மருத்துவர் வெங்கடேசன், குடல் மற்றும் இரைப்பை மருத்துவர் வெங்கட்ராமன், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் அனிதா தனசேகரன், அவசர மற்றும் தீவிர சிகிச்சை மருத்துவர் அசாருதீன், இருக்கை மருத்துவர்கள் அரவிந்த் மற்றும் ஆலியா விழாவில் கலந்து கொண்டனர்.

மருத்துவர்களின் சேவை, இந்த சமூகத்தில் சமூக சேவைக்காகவும் ஏற்றுக்கொண்ட பணிக்காகவும் எவ்வளவோ பேர் பணியாற்றி, சேவை ஆற்றி வந்தாலும் அனைவருக்குமான சேவை செய்வதில் மருத்துவர்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் பற்றியும் அனைவரும் மருத்துவர்களை கடவுள்களாக உயிர் காக்கும் மருத்துவராக எண்ணி அவர்களை எவ்வாறு போற்றுகிறார்கள்… சமூகத்தில் இதுவரை அவர்கள் ஆற்றி வந்த பணி என்ன? மருத்துவர்கள் தேவை என்ன என்பது குறித்தும் அவர்கள் இந்த சமூகத்திற்கு ஆற்றியுள்ள அர்ப்பணிப்புகள் பற்றியும் மிட்டவுன் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எடுத்துரைத்து மருத்துவர்களை கவுரவித்து நன்றியை சமர்ப்பித்தனர்.

இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். உணவியல் நிபுணர் மகாலட்சுமி விழாவைத் தொகுத்து வழங்கினார். மருத்துவமனை மேலாளர் சத்தியசீலன் நன்றியுரை வழங்கினார். இவ்விழா ஏற்பாடுகளை மருத்துவமனை துணை மேலாளர் முகமது யாசர் செய்திருந்தார்.