காக்காமுட்டை மணிகண்டன் இயக்கியுள்ள கடைசி விவசாயி படம் நாளை(11.02.2022) வெளியாகவுள்ளது. பட வெளியீட்டுக்கு முன்பே நேற்று முன்தினம் சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது விவசாயம் இன்றி உலகம் இயங்க முடியாது எல்லா தொழிலுக்கும் அடிப்படை ஆதாரம் விவசாயம் கடைசி விவசாயி என பெயர் வைத்திருக்கிறாரே என்ற சந்தேகத்துடன் இயக்குனர் மணிகண்டனிடம் பேசியபோது,
விவசாயத்தை ஒரு தொழிலாகப் பார்க்காமல், ஒரு வாழ்வியலாகப் பார்க்க வேண்டும். அதில் எவ்வளவு பேர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள், அது எப்படி இருக்கிறது என்பது தான் கதையின் கரு.
ஒரு கிராமத்தில் நல்ல விசயங்களே நடக்காமல் இருக்கிறது. குலதெய்வம் கும்பிடாமல் இருக்கிறது என்று அதை கும்பிட ஊர் தயாராகும். அதை கும்பிடும் வழிமுறைக்கு அனைவரும் ஒரு மரக்கா நெல் கொடுக்க (ஐந்து கிலோ)வேண்டும்.
அப்போது தான் அவர்களுக்குத் தெரியவரும், அந்த ஊரில் யாரும் விவசாயம் செய்யவில்லை என்று.
இருபது வருடங்களாக கிராம தெய்வத்தைக் கும்பிடவில்லை என்பதால் யாருக்குமே இந்த நெல் காணிக்கை என்பது நினைவில் இருக்காது. ஆனால் அந்த ஊரில் 85 வயதான பெரியவர் ஒருவர் தனது நிலத்தில் தனக்கான விவசாயத்தை மட்டும் பாரம்பர்ய முறைப்படி செய்து வருவார் அவருக்குக் காதும் அவ்வளவாகக் கேட்காது.
அவர் உண்டு, தோட்டமுண்டு என்று இருப்பார். அந்த ஊரே அவரிடம் போய் நெல் கேட்கும். அவர் என்ன செய்கிறார், குலதெய்வக் கோயில் கும்பிடுவது எப்படி மாறியுள்ளது, வழிபாட்டு முறையில் நமக்கு இருக்கும் நம்பிக்கை ஆகிய அனைத்தும் திரைக்கதையாக இருக்கும்.
கிராமத்தில் ஒரு துக்கத்தைச் சொன்னால் கூட நையாண்டியாகச் சொல்வார்கள். ஆகையால் படத்தில் காமெடியை தவிர்க்கவே முடியாது. படம் முழுக்க காமெடி இருந்து கொண்டே இருக்கும். நாகரீகம் வளர்வதற்கு முன்னாள் இருந்த மனிதர்களும், நாகரீகத்தில் உச்சத்தில் இருக்கும் மனிதர்களும் வரும் போது எப்படி காமெடி இல்லாமல் இருக்கும். அதே போல், அந்த உரையாடல் நம்மை யோசிக்க வைக்கும் விதமாகவும் இருக்கும்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சுற்றி சுமார் 16 கிராமங்களில் படமாக்கியிருக்கேன். அங்கிருக்கும் விவசாய முறை ரொம்ப பழசு. நம்ம தமிழர்களோட விவசாய முறையை இன்னும் கையில் வைத்திருப்பது கரிசல்காட்டு விவசாயிகள் தான். அவர்களைக் கடைசி விவசாயிகளாகத் தான் பார்க்கிறேன்.
இந்தப் படத்தின் தலைப்பைப் பார்த்து விவசாயம் முடிந்துவிடப் போகிறதோ என்று நினைத்துவிடாதீர்கள்.கிராமத்தில் இருப்பவர்களையே நடிக்க வைத்துள்ளேன். நேரடி ஒலிப்பதிவு என்பதால் அவர்களுடைய குரலிலேயே முழுப்படமும் இருக்கும் என்றார்.
- திருப்பரங்குன்றம் அருகே மின்னல் தாக்கி பெண் பலிமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கொம்படி கிராமத்த்தில் மின்னல் தாக்கி பெண் பலியான சம்பவம் பெரும் […]
- மதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் புதிய ஆரம்ப நகர்புற நல்வாழ்வு மையம் திறப்புமதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் உள்ள 94வது வார்டு மகாலட்சுமி காலணியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப […]
- ஜெயங்கொண்டம் அருகே 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்புஜெயங்கொண்டம் அடுத்துள்ள மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில். 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு […]
- கடையநல்லூரில் புதிய ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்கடையநல்லூரில் புதிதாக அமைக்கப்பட்ட ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி […]
- மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றதுமதுரை மாநகராட்சி […]
- அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மண்டல அலுவலகம் முன்பாக […]
- நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம்எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது.இந்தியளவில் டாப் […]
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஆளுநர்”நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை அறிந்தும் […]
- திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகைமதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை- […]
- பாரதி கணேஷ் 24 வருடங்கள் கழித்து இயக்கும் குழந்தைகள் படம்விஜயகாந்த், சிம்ரன், கரண் நடித்த ‘கண்ணுபட போகுதய்யா’ படத்தை இயக்கியவர் பாரதி கணேஷ். 1999ம் ஆண்டு […]
- ஆஞ்சநேயருக்கு டிக்கட் முன்பதிவு செய்த ஆதிபுருஷ் படக்குழுராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . […]
- விருதுநகர் அருகே சாலை விபத்து … நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலிவிருதுநகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த நிதிநிறுவன ஊழியர்கள் விபத்தில் சிக்கி பலியானார்கள்.விருதுநகர் […]
- ராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடம் திறப்புராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக காவல்துறை தலைமை இயக்குனர் […]
- இந்தியாவின் முதல் தபால்காரர் பற்றிய படம் ஹர்காராகலர்புல் பீட்டா மூவ்மென்ட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில், உருவாகும் படம் ‘ஹர்காரா’. ‘வி1 மர்டர் கேஸ்’ […]
- விஐய் 68 படத்தின் பெயர் என்ன?விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் […]