• Wed. Aug 12th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பா.ஜ.க.வுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை. – எடப்பாடி பழனிச்சாமி அதிரடி..!

Byவிஷா

Sep 26, 2023

பா.ஜ.க.வுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசும் போது, பா.ஜ.க.வுடன் இன்றும் கூட்டணி இல்லை, இனி என்றும் கூட்டணி இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைக்கப்படும். கூட்டணி முறிவால் எந்த பிரச்சினை வந்தாலும் அதனை சந்திக்க தயார். கூட்டணி முறிவு குறித்து தொண்டர்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம், என்று தெரிவித்து உள்ளார்.
மேலும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை விரைவுப்படுத்த மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பால், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் புதிய கூட்டணி உருவாவது உறுதியாகி இருக்கிறது.