• Wed. Nov 4th, 2026

புதுக்கோட்டை மாநகரக்குழு காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து கோரிக்கை மனு..,

Byமுகமதி

Nov 4, 2026

தீபாவளியை முன்னிட்டு பொதுமக்களுக்கும் முதியவர்களுக்கும் சிறுகுறு வணிகர்களுக்கும் இடையூறாக இருக்கும் தேவையற்ற போக்குவரத்துக்கு இடையூறான நெருக்கடிக்கு உள்ளாக்கும் தடுப்புகளைத் தவிர்க்க வலியுறுத்தி இந்த மனு கொடுக்கப்படுகிறது.

2025 கடந்த ஆண்டு வடக்கு ராஜவீதி, மேல ராஜவீதி,அண்ணா சிலைக்கு மேற்கு பக்கம் தெற்கு நான்காம் வீதி தண்டபாணி கோவில் அருகே ஆகிய பகுதிகளில் முன்கூட்டியே தடுப்பை ஏற்படுத்தி இருசக்கர வாகனங்கள் பயணிக்க முடியாமல் முதியவர்களும் பெண்களும் பாதசாரிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளானர். இந்நிலையில் இந்த ஆண்டும் அப்படித்தான் பல தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வடக்குமூன்றாம் வீதி வடக்கு நான்காம் வீதி ஆகிய பகுதியிலும் நான்கு சக்கர வாகனங்கள் பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதற்கு வழித்தடத்தை உருவாக்கும் நிலையில் இருசக்கர வாகனம் செல்வதற்கான வழித்தடம் என்பது நெருக்கடிக்குள்ளாகிறது.

ஆகவே வடக்கு ராஜ வீதி மேல ராஜவீதி தெற்கு நான்காம் வீதியில் தண்டபாணி கோயில் முக்கம்ஆகிய பகுதிகளில் தடுப்புகளை தவிர்த்து இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு அனுமதித்து பொதுமக்களுக்கான சிரமத்தை தவிர்க்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் கழக நிர்வாகிகள் தமிழ்நாடுமாநில செயலாளர் ஹக்கீம், புதுக்கோட்டை மாநகரத் தலைவர் சுப்பிரமணியன் மாநகர செயலாளர்
பழ .குமரேசன் மாநகர பொருளாளர் முருகேசன் உள்ளிட்டோர் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.