நாகர்கோவிலில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழகத் செயலாளர். இரா. முத்தரசன் மோடியின் பிறந்த நாளில் ஒரு இந்திய பிரஜை என்ற உரிமையில் மோடிக்கு வாழ்த்துகள் என தெரிவித்தவர் தொடர்ந்து வைத்த குற்றச்சாட்டு.பிரதமரின் பிறந்த நாளில் விஸ்வகர்ம 18வயதை எட்டியுள்ள இளைஞர்களுக்கு, தந்தை வழி தொழில் செய்வதற்கு கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
ராஜாஜியின் அரை நாள் பள்ளி, பின்னர் தந்தை செய்யும் தொழிலில் பயிற்சி என்ற திட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பை பதிவு செய்த நேரத்தில் காங்கிரஸ் முதல்வர் ராஜாஜியின் திட்டத்தை அன்று காமராஜரே எதிர்ப்பு தெரிவித்த நிலையில்.சொந்த கட்சியில் இருந்து எதிர்ப்பு வந்ததால் ராஜாஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜாஜி கொண்டு வந்த அவரது கல்வி திட்டத்திற்கு எவ்விதமான பெயரும் சூட்ட வில்லை. நாங்கள் தான் அதனை குலக்கல்வித் திட்டம் என குறிப்பிட்டோம்.
ராஜாஜியின் அதே குலக் கல்வி திட்டத்தை தான் மோடி கொண்டுவந்துள்ளார். விஸ்வகர்ம இளைஞர்கள் 18_வயதை கடந்த இளைஞர்கள் சுய தொழில் செய்ய வங்கி கடன் திட்டம் என்பது அந்த சமூக இளைஞர்களின் கல்லூரி மற்றும் உயர் கல்வி திட்டத்தை தடுக்கும் ராஜாஜியின் குல கல்வி திட்டத்தின் அதை சிந்தனை என தெரிவித்தவர்.அந்த சமூகம் முன்னேறடைய தந்தை செய்யும் தொழிலுக்கு கடன் உதவி என்பது தான் சரியான திட்டமாக இருந்திருக்கும்.
சனாதன மாநாட்டை நீதிமன்றம் சென்று தடுக்காது.அந்த மாநாட்டில் இளைஞர் நல அமைச்சர் உதயநிதி பேசியதில் எந்த தவறும் இல்லை என தெரிவித்தார். இப்போது நீதி மன்றம் செல்பவர்கள்,அன்றே ஏன் செல்லவில்லை.?
தமிழக அரசு தேர்தல் கால வாக்குறுதியை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வரும் சூழலில் சொல்லாத வாக்குறுதி காலை நேர உணவு என்பது மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது தெலுங்கானா மாநிலம் அதிகாரிகள் தமிழகத்தில் செயல்படுத்தும் காலை உணவு திட்டத்தை பார்த்து சென்று அவர்கள் மாநிலத்தில் ஆரம்ப பள்ளி முதல் உயர் நிலை வகுப்புகள் வரை உயர்த்தி இருக்கின்றனர்.
தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை பற்றி பேசும் தமிழிசை.மோடி சொன்ன ஒவ்வொரு வர் வங்கி கணக்கில் ரூ.15_லட்சம் வரவு வைப்போம் என்றாரே.கடந்த 9 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் இந்த திட்டத்தை நிறைவேற்ற என்ன முயற்சி எடுத்தார்.?
தமிழக முதல்வர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல் படுத்த தொடங்கியதுமே.கடந்த 30_மாதங்களுக்கும் சேர்த்து கொடுக்க வேண்டும் என சொல்லும் தமிழிசை. எங்களுக்கு ரூ.15_லட்சம் வேண்டாம், மோடியிடம் சொல்லி வெறும் ரூ.15ஆயிரம் போட சொல்லுவாரா என முத்தரசன் கேள்வி எழுப்பினார்.