• Wed. Nov 4th, 2026

5 மாநிலங்களில், 574 மாணவர்கள் தனியார் கல்லூரியில் buildx hackathon 2026 கோலாகல தொடக்கம்..,

ByPrabhu Sekar

Nov 4, 2026

சென்னை அடுத்த வண்டலூரில் அமைந்துள்ள தனியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில், தேசிய அளவிலான BuildX Hackathon 2026 நிகழ்ச்சி  இன்று தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் ஹைதராபாத்தில் செயல்படும் தொழில்நுட்பம் மற்றும் புதிய தொழில் தொடக்க நிறுவனங்களை ஊக்குவிக்கும் அமைப்பான (AIC T-hub) மற்றும் கிரசன்ட் நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள, இந்த ஹேக்கத்தானில், தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்த 29 கல்வி நிறுவனங்களில் இருந்து 574 மாணவர்கள், 166 குழுக்களாக பங்கேற்றுள்ளனர்,

36 மணி நேரம் நடைபெறும் இந்த ஹேக்கத்தானில்,  துணைவேந்தர் டாக்டர் A. பீர் முகமது தலைமையுரை ஆற்றினார்,

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சர்வதேச புத்தொழில் அறக்கட்டளை-ன் நிறுவனர் டாக்டர் ஜே. ஏ. சௌதரி, தனது தொழில்முனைவோர் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன், வரவிருக்கும் புதிய தொழில் முனைவோர் திருவிழா நிகழ்வில் பங்கேற்குமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார். கௌரவ விருந்தினராக பங்கேற்ற தொழில்நுட்பப் புத்தொழில் வளர்ச்சி மையம் (T-hub) இன் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் டாக்டர் கந்தர் சேத்தி, பாதுகாப்பு துறையில் உள்நாட்டு தொழில்நுட்பங்களின் தேவை குறித்து விளக்கினர்.