தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா, நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஈசிஆரில் இருக்கும் ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் நேற்று காலை 10.25 மணிக்கு நடைபெற்றது.
இந்நிலையில் இன்று இந்த தம்பதியினர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளனர். இதையடுத்து நாளை பிரஸ் மீட் கொடுக்கின்றனர். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தம்பதியினர் இருவரும் ஹனிமூன் செல்ல வில்லையாம். நயன்தாராவுக்கு ஷாருக்கானுடன் ஜவான் திரைப்படமும், சிரஞ்சீவியுடன் காட்பாதர் என்ற திரைப்படமும் தொடர்ச்சியாக இருப்பதால் ஹனிமூன் பிளானை ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.